பனி வரகு, அனைத்து மண்ணிலும் வளரும். சாகுபடி நிலத்தை, புழுதி பறக்க மூன்று முறை கோடை உழவு செய்ய வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் கிடைக்கும். மழையில் மண் ஈரத்தன்மையோடு இருக்கும். தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உழவு செய்து மண்ணைப் புரட்டி போடவேண்டும். அரை ஏக்கர் நிலத்துக்கு 4 கிலோ விதையை விதைத்து உழவு செய்ய வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்கலாம். மார்கழிப் பனியில் நன்றாக வளர்ந்து வந்து விடும்.
பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. இறவையில் பனி வரகு சாகுபடி செய்யும் போது, இரண்டு அல்லது மூன்று முறை பாசனம் செய்யலாம். ஒவ்வொரு பாசனத்தின் போதும், 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். கதிர் முற்றியதும் கதிரை மட்டும் அறுத்து களத்தில் கொட்டி காய வைத்து, குச்சியை வைத்து தட்டி, வரகை தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral