50-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்திருப்பவர்களுக்கு தினமும் முக்கால் டன் முதல் ஒரு டன் வரை சாணம் கிடைக்கும். 20 அடி நீளம் 15 அடி அகலம், 6 அடி ஆழம் கொண்ட இரண்டு குழிகளை அமைக்க வேண்டும். முதல் இரண்டு மாதத்திற்கு அதில் சாணம் மட்டும் இட வேண்டும்.
அதற்கு மேல் வேம்பு, எருக்கன், நொச்சி இலை, தென்னை ஓலை எல்லாம் கலந்து 2 டன் போட வேண்டும். அடுத்து 2 டன் வண்டல் மண் போட்டு மறுபடியும் சாணம், இலைதழைகள், வண்டல் மண் என சுழற்சி முறையில் போட்டுக்கொண்டே வர வேண்டும். குழி நிறைந்த பிறகு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பிறகு அந்த எருவை எடுத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். ஒரு குழியில் எரு முடிவடைந்ததும் அடுத்த குழியில் எரு தயாராகிவிடும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral