இது ஒரு வித்தியாசமான போராட்டம். கலபகோஸ் தீவுகளை அறிந்திருப்பீர்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு மிக முக்கியமான தீவுகள் இவை. பரிணாமவியலின் பரிசோதனைகூடம் என அழைக்கபடும் தீவுகள். டார்வின் இங்கே வந்து தான் பரிணாமவியலை கற்றார்.
இங்கே இருக்கும் பின்ச் பறவைகள் எண்ணிக்கை மிக குறைந்து வந்தது. காரணம் மாகட் எனப்படும் அட்டைபூச்சிகள் இப்பறவைக் கூடுகளில் புகுந்து இளம் பின்ச் குஞ்சுகளின் ரத்ததை குடித்து அவற்றை அழித்து வந்தன. இத்தீவில் இருப்பது போன்ற பின்ச் பறவைகள் எங்கும் இல்லாததால் அட்டைபூச்சிகளிடம் இருந்து இவற்றை எப்படி காப்பது என்ற போராட்டத்தில் விஞ்ஞானிகள் இறங்கினார்கள்.
முதலில் சில பின்ச் பறவைகளை பிடித்து லேபில் வளர்த்து இனம் அழியாமல் காக்கும் முயற்சி வெற்றியடைந்தது. ஆனால் கலபகோஸ் தீவுகளில் இருக்கும் பின்ச் பூச்சிகளை எப்படி காப்பது?இதற்காக “மலட்டு அட்டைபூச்சிகள் உத்தி” என்ற புதுவகை உத்தி கையாளப்பட்டது. இதன்படி விஞ்ஞானிகள் லேபில் ஆயிரக்கணக்கான அட்டைபூச்சிகளை உருவாக்கி, அதில் பெண்களை கொன்று ஆண்களை மருந்துகள் மூலம் மலடாக்கி தீவுகளில் விடுவார்கள்.
மலட்டு ஆண்பூச்சிகள் தீவில் இறங்கி, அங்கிருக்கும் பெண்பூச்சிகளுடன் உறவுகொண்டால் அவற்றின் ஜனத்தொகை குறையும். ஏராளமான ஆண்கள், குறைவான பெண்கள் என்கையில் ஆண்பூச்சிகளுக்கிடையே சண்டையும் வரும். தீவில் இயற்கையாக இருக்கும் ஆண்பூச்சிகளும் பெருமளவில் அழியும்…
இதுதான் உத்தி. ஆனால் கலபகோஸ் தீவுகளில் இருக்கும் அட்டைபூச்சிகளை செயற்கையாக லேபில் உருவாக்குவது மிக கடினமாக இருந்தது. அவை பறவை ரத்தத்தை மட்டுமே குடிக்கும். முட்டையின் வெள்ளைக்கரு, பால், மாட்டிறைச்சி, ஈரல் என எதை உணவாக கொடுத்தும் அவை வளரவில்லை.
அட்டைகளுக்கு உணவாக நிஜ பறவைகளை கொடுப்பதா என்ற எதிக்ஸ் பிரச்சனையும் இந்த திட்டத்தை தடை செய்தது. அதன்பின் அந்த எளிய யோசனையை ஒரு விஞ்ஞானி சொன்னார். “கோழி ரத்தத்தை கொடுத்து வளர்த்தால் என்ன?’ என அதன்பின் உற்சாகமான விஞ்ஞானிகள் கோழிரத்தத்துடன், பால் பவுடர், துத்தநாகம், வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவற்றை கலந்தார்கள். அதில் அட்டைப்பூச்சிகள் செழித்து வளர்ந்தன.
41 மலட்டு ஆண் அட்டைபூச்சிகளை இதுவரை உருவாக்கிவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அடைந்ததும் தீவில் இவை இறக்கப்படும். தீவில் இப்போது 80 பின்ச் பறவைகளே மீதமிருப்பதால் அவற்றை காக்கும் கடைசி முயற்சியாக இது கருதப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் பின்ச் பூச்சிகளை காக்க நடக்கும் இந்த வித்தியாசமான போரின் முடிவுகள் தெரியவரும்…
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral