நாட்டு ரகங்களுக்கு 40 அடி இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 மரங்கள் நடவு செய்யலாம். ஒட்டு ரகங்களுக்கு 25 அடி இடைவெளி போதுமானது. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 60 மரங்கள் நடவு செய்யலாம்.
புரட்டாசிப் பட்டம் புளி நடவுக்கு ஏற்றது. தேர்ந்தெடுத்த நிலத்தில், 2 அடி சதுரம் 2 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ களிமண்ணைக் கொட்டி, கன்றுகளை நடவு செய்து பாசனம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு 3 மாதங்களுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மழையைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது. செடிகள் வளரும் நேரத்தில் ஊடுபயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. மரங்கள், காய்ப்புக்கு வந்த பிறகு.. மரத்தின் அடியில் தார்ப்பாய் விரித்து கிளைகளை உலுக்கினால், பழங்கள் உதிர்ந்து விடும். அறுவடை முடிந்ததும் மரங்களை கவாத்து செய்து விட வேண்டும்.
புளியங்கன்றுகள் எங்கு கிடைக்கும்?
இந்தியாவில்தான் புளியை அதிகம் உபயோகிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புளி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பி.கே. எம்-1, உரிகம் ஆகிய இரண்டு ரகங்களின் ஒட்டுப்போட்ட கன்றுகள் தோட்டக்கலைத் துறை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 20 ரூபாய் 30 ரூபாய் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளிலும் கன்றுகள் கிடைக்கும்.
தொடர்புக்கு, நறுமணப் பொருட்கள் மற்றும் நடவு பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் : 0422-6611284
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral