சித்தர் பாடல்
குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுற்றபாண்டு பன்னோ யொழிய – நிரற் சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்
கையாந் தகரையொத்தக் கால்.
( அகத்தியர் குணபாடம் )
பொருள்
தொண்டையில் ஏற்படும் நோய்கள், காமாலை, குஷ்டம், ரத்த சோகை, வயிறு ஊதிப்போதல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது.
கரிசலாங்கண்ணியின் தன்மை
பித்த நீர்ப்பெருக்கி – Cholagogue
உரமாக்கி – Tonic
உடல்தேற்றி – Alterative
வாந்தி உண்டாக்கி – Emet
நீர்மலம் போக்கி – Purgative
வீக்கம் உருக்கி – Deobstruent
ஈரல் தேற்றி – Hepictonic
கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய குணத்தால், மஞ்சள் காமாலை, சோகை போன்ற நோய்களுக்கு கரிசலாங்கண்ணி பயன்படுத்தப்படுகிறது.
கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை:
- வெள்ளைக் கரிசலாங்கண்ணி
- மஞ்சள் கரிசலாங்கண்ணி
இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகவும் விசேஷமானது. இரண்டையுமே உணவாகச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.
கரிசலாங்கண்ணிக் கீரையின் மருத்துவப் பயன்கள்
- கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.
- கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
- கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறு (30 மி.லி), பருப்புக் கீரைச்சாறு (30 மி.லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.
- கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறில் நெல்லி முள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.
- கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்தச் சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்
நீர்ச்சத்து – 81.1 கிராம்
புரதம் – 4.4 கிராம்
கொழுப்பு – 0.8 கிராம்
தாது உப்புகள் – 4.5 கிராம்
சர்க்கரைச்சத்து – 9.2 கிராம்
சுண்ணாம்புச்சத்து – 30.63 மி.கி
பாஸ்பரஸ் – 46.2 மி.கி
இரும்பு – 8.9 மி.கி
கலோரித்திறன் : 62 கலோரி
100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்
நீர்ச்சத்து – 93.7 கிராம்
புரதம் – 1.1 கிராம்
கொழுப்பு – 0.2 கிராம்
தாது உப்புகள் – 1.4 கிராம்
நார்ச்சத்து – 0.4 கிராம்
சர்க்கரைச்சத்து – 3.2 கிராம்
சுண்ணாம்புச்சத்து – 39 மி.கி
பாஸ்பரஸ் – 10 மி.கி
இரும்பு – 3.9 மி.கி
கலோரித்திறன் : 19 கலோரி
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral