கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.. பருவ காலங்களில் முளைக்கும் காளான் வகைகளை வரிசைப்படுத்தி, புதிய ரக பால் காளான் தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயற்கையாக முளைத்த காளான்களைச் சேகரித்து வைத்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய, பயிர் நோயியல் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, “காளான் வகைகளை ஆராய்ந்து, புதிய ரகம் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலகளவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகை இயற்கைக் காளான்கள் உள்ளன. அவற்றில், 50 ஆயிரம் வகை காளான்கள், உணவுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், பண்ணைகளில் நான்கு வகையான காளான்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது புதிய ரக காளான் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆய்வுக்கூடத்தில், 22 வகையான காளான்கள் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், நரசிம்மநாயக்கன் பாளையத்தில் இருந்து ஆறரை கிலோ எடையுள்ள ஒரு காளானைக் கொண்டு வந்துள்ளோம். அதையும் பெருக்குவதற்காக, ஆராய்ச்சி செய்து வருகிறோம். தவிர, ஜப்பான் நாட்டில் பிரபலமான ‘ஹிட்டாக்கி’ எனும் காளான் வகை குறித்தும், ஆராய்ச்சிகளைத் துவங்க உள்ளோம்” என்றார்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral