நாவல் மரங்களை மழைக்காலங்களில் நடவு செய்வது நல்லது. தனியாக பட்டம் கிடையாது. அனைத்து மண் வகைகளிலும் வளரும். நாவல் மரம் 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்தாலும்.. வருமான ரீதியாக காய்ப்புக்கு வர 8 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும். அறுவடையின்போது, பழம் சிதையாமல், மண் படாமல் பக்குவமாகப் பறிக்க வேண்டும். வீரிய நக நாவல் உடையாது, அடிபடாது. அதிக நாள் தாங்கக்கூடியது. இயற்கை இடுபொருட்கள் கொடுக்கும்போது பழத்தின் சுவை கூடுவதோடு தரமும் கூடுகிறது.
நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், ஜம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன. நாவலில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு என மூன்று சுவைகளும் உள்ளன. மதுரை மாவட்டத்தில் பாலமேடு, சத்திரப்பட்டி, அழகர்கோவில் போன்ற மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் நாவல் மரங்கள் ஏராளமாக உள்ளன.
மருத்துவ குணங்கள் !
நாவல் பழம், அதிக மருத்துவப் பயன் கொண்டது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-பி போன்ற தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. நாவல் பழத்தின் உவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். ரத்தத்தின் கடினத்தன்மை மாறி இலகுவாகும். இது ரத்தத்தில் கலந்துள்ள வேதிப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும். நாவல் சாறு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால்… இன்சுலின் சுரப்புக் குறைபாடு உள்ளவர்கள் நாவல் பழச்சாறை உண்ணலாம்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral