10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்கிற விதத்தில் கலந்து விதைநேர்த்தி, நாற்றங்கால், நடவு, என ஒவ்வொரு பருவத்திலும் மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளித்து வரவேண்டும். கதிர் பிடித்தவுடன், பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால், சன்ன ரக நெல், மோட்டா ரக நெல்லாக கடினமாகிவிடும்.
பஞ்சகவ்யா பயன்படுத்துவதால், அதிக தூர்கள், அதிக கிளைகள், அதிக கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரிலும் அதிக நெல்மணிகள் பிடிப்பதுடன் நோய்த்தாக்குதலும் குறையும். பயிர் பராமரிப்புச் செலவும் குறைவு. வழக்கத்தைவிட, 15 நாட்களுக்கு முன்னரே அறுவடை செய்யலாம். நெல்லின் எடையும் அரைத்தபிறகு கிடைக்கும் அரிசியின் அளவும் அதிகம். சமைத்த சாதம் இரண்டுநாள் வரை கெட்டுப்போகாமல் அதிக ருசியுடன் இருக்கும். நஞ்சில்லா உணவு, மருத்துவச் செலவு குறைவு. பஞ்சகவ்யா தெளிப்பதால் எத்தனை நன்மைகள் பார்த்தீர்களா..?!
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral