வெளிமாநிலங்களிலிருந்து பல நிலக்கடலை ரகங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் பாரம்பர்ய நிலக்கடலை ரகங்கள், 125 நாட்கள் 135 நாட்கள் கொண்ட கொடி, அடர்கொடி வகைகளைச் சேர்ந்தவை. தற்சமயம் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, 105 நாட்களில் வளரக்கூடிய கொத்து, அடர்கொடி ஆராய்ச்சி ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் கோ-6, கோ-7, டி.எம்.வி-13 (சிவப்பு நிற விதை), வி.ஆர்.ஐ-7 ஆகிய ரகங்கள் இருக்கின்றன. இவை தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ரகங்கள். மானாவாரி, இறவை இரண்டிலும் பயிர் செய்யக்கூடியவை. மானாவாரிக்கு ஆனி மாத கடைசியிலும், இறவைக்கு கார்த்திகை மாதத்துக்குள்ளும் விதைக்க வேண்டும்.
மானாவாரியில் 800 கிலோவும், இறவையில் 1,000 கிலோ முதல் 1,500 கிலோ வரையிலும் காய்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் கவனமாக, விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral