தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து நன்கு முறுக்கினால், சாறு கிடைக்கும். 10 முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து, அதில் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் கலக்கினால்… கரைசல் தயார். இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும்.
இதை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்குகள் தேவைப்படும். தேவைப்பட்டால், இந்தக் கரைசலை ஒரு வார இடைவெளியில் மீண்டும் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தக் கரைசலுடன் 50 கிராம் சூடோமோனஸ் அல்லது 50 கிராம் வசம்புத்தூளைச் சேர்த்துத் தெளித்தால் நோய்களும் கட்டுப்படும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
jasmain flower irku spera panalama sir
எந்த நோய் கட்டுப்படுத்தும்
எந்த நோய் கட்டுப்படுத்தும்.