ஒரு ஏக்கர் நடவு செய்ய 200 நாற்றுகள் தேவைப்படும். தற்போது ஒரு நாற்று 120 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 15 அடி இடைவெளியில் 1 கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். கட்டிகள் இல்லாத செம்மண் மற்றும் தொழுஉரம் இரண்டையும் சரிசமமாக கலந்து முக்கால் அடி அளவுக்கு குழிக்குள் கொட்ட வேண்டும். பிறகு, நாற்றுகள் உள்ள பைகளின் அடிப்பகுதியை கிழித்துவிட்டு, நடவு செய்து மேல் மண்ணைக் கொண்டு குழிகளை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டும்தான் பாசனம் செய்யவேண்டும். வாரம் இருமுறை பாசனம் அவசியம்.
15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். மாதம் ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிலோ ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம் இட வேண்டும். இரண்டும் ஆண்டுகள் கழித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். முறையாகப் பராமரித்தால் எலுமிச்சையில் 25 ஆண்டுகளுக்கு தொடர் மகசூல் கிடைக்கும்.
200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்து, 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலந்து, மாதம் ஒருமுறை செடிகளுக்கு கொடுத்து வந்தால்… வேர் அழுகல், வேர்க்கரையான் போன்ற வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
செடிகள் வளரும் பருவத்தில் இலைவெட்டுப்புழுக்கள் தாக்கி இலைகளை கடித்து சேதாரம் செய்யும். மாதம் ஒரு முறை அதிகாலையில் செடிகள் நன்கு நனையும்படி மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளித்து வந்தால்… புழுக்கள் வராது. தவிர, சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி பூச்சி ஆகியவையும் வராது.
பறிப்பில் கவனம்!
எலுமிச்சை மரங்களில் முள் இருப்பதால் காய்களை கவனமாகப் பறிக்க வேண்டும். ஆங்கில ‘எஸ்’ வடிவ ‘கம்பி கொக்கி’ பொருத்தப்பட்ட நீண்ட கம்புகள் மூலமாக காய்களைப் பறிக்க வேண்டும். பழங்களை மரத்தில் கனிய விடக்கூடாது. பழுக்கத் தொடங்கியதும் பறித்து விட வேண்டும். பழங்களின் அளவுக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
நாற்று எங்கு கிடைக்ககும்
plant is too costly ,trusted nursery can sell plant for 20 – 40 rupees ,this is to much price.
என்னிடம் lemon உள்ளன சந்தை படுத்தல் எப்படி
Will it(lemon)grow in claysoil. My land is clay what should I do in my form to get good yeild.
எலுமிச்சை மரம் அதிக தளைவு எடுப்பதற்கு இயற்கை மருந்து எதை பயன்படுத்தலாம்