கேரளா மாநிலத்திலத்தில் கள்ளிக்கட்டு மாவட்டத்தில் உள்ள செம்பனோடா கிராமத்தில் இருக்கும் Mrs.OmanaKaithakkulath என்ற பெண்மணியை Ginger Woman’ என்று அழைக்கின்றனர். இவர் அவருடைய நிலத்தில் இஞ்சியை பயிரிட்டு வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ICAR-KrishiVigyan Kendra தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இவர் இஞ்சி விவசாயத்தை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கென்று செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை. அவர் நிலத்தில் தென்னை நார்க்கழிவு, கால்நடைகள் சாணம் ஆகியவற்றை உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் மிகத்தரமான இஞ்சி விதைகளை நிலத்தில் விதைத்து அதிக அளவு மகசூலினை பெற்று வருகிறார். தரமான விதை என்றால் கண்டிப்பாக 5 கிராம் இருக்கவேண்டும். இஞ்சி வளருவதற்கு கண்டிப்பாக சரியான சூரியஒளி, தண்ணீர் அவசியம். இவர் கடந்த 2015 மே மாதம் நட்ட இஞ்சி விதையிலிருந்து 300 சணல் பைகள் நிரம்பும் அளவிற்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறுவடை செய்துள்ளார். அவர் 4 கிலோ இஞ்சி விதையில் 108 கிலோ மகசூல் எடுத்துள்ளார்.
ஒவ்வொரு செடியிலும் இஞ்சி சுமார் 20 கிலோ வரை இருக்கும். 2.5 செண்ட் நிலத்தில் இதனை உற்பத்தி செய்துள்ளார். இவருடைய இஞ்சியினை விற்பனை செய்ய kvk அமைப்பு உதவியளிக்கிறது. இவர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எப்படி இஞ்சி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பதற்கு பயிற்சி அளிக்கிறார். மேலும் இவர் மீன் வளர்ப்பு, பறவை வளர்ப்பு ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறார்.
http://www.icar.org.in/en/node/10280
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral