Site icon Vivasayam | விவசாயம்

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி கருவி மண்ணின் தரத்தை அறிந்துகொள்ள மிக உதவியாக இருக்கிறது.

இந்த கருவிக்கு பெயர் மண் உணரி. இது மண்ணின் தன்மையினை மிக எளிதாக கண்டுபிடித்து விடுகிறது. இந்த கருவியின் செயல்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள இங்கிலாந்து மற்றும் சீனாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கருவிக்கு அவர்கள் AgriRover என்று பெயரிட்டுள்ளனர். இந்த கருவி தற்போது ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டை போக்க மிக உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோ தொழில்நுட்பம் துல்லியமான விவசாய வளர்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியினை பெற்றுத் தரும்.

தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுடைய அத்தியாவசிய தேவையான உணவினை அதிக அளவு உற்பத்தி செய்ய இந்த AgriRover கண்டிப்பாக உதவும். மண்ணின் தரத்திற்கு  ஏற்ப சரியான விதைகளை விதைத்து அதிக மகசூலினை பெறுவதற்கு இந்த மண் உணரி கருவி உதவுகிறது.

https://www.sciencedaily.com/releases/2016/05/160510085141.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

 

 

 

 

 

Exit mobile version