சோயா பீன்ஸின் முதல் எதிரியாக இருப்பது நீர்க்கட்டி நூற்புழு இது தாவரத்தின் வேர்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் வேர் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பால் அயோவா மாகாணத்தில் சோயா பீன்ஸ் உற்பத்தி அதிக அளவிற்கு பாதிப்படைந்துள்ளது. இந்த புழுக்களின் பாதிப்பு பெரும்பாலும் ஈரமான மண் மற்றும் குளிர் காலநிலையினால் அதிகம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிலிருந்து சோயவை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பூச்சியியல் வல்லுநர் ஆடம் Varenhorst மற்றும் பயிர் உற்பத்தி சிறப்பு ஆய்வாளர் ஜொனாதன் Kleinjan ஆகியோர் இணைந்து புதிய முறையில் நோய் தடுப்பு முறையினை கையாண்டுள்ளனர்.
அவர்களின் ஆய்வுப்படி குளிர்காலத்தில் நூற்புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க புதிய மரபணு விதைகளை மண்ணின் தரத்திற்கு ஏற்ப அளித்தால் குறைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. நூற்புழுக்கள் ஒரு முறை மண்ணில் உருவானால் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்குமாம். இந்த புழு 300 முட்டைகள் வரை மண்ணில் இடுமாம்.
அதனால் விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனை செய்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதிக மகசூலை பெற முடியும். பொதுவாக ஆற்றுப்பகுதியில் உள்ள மண் வகைகள் இந்த புழுக்களுக்கு எதிரியாகவே உள்ளது. அந்த மண் இந்த புழுக்களை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக திகழ்கிறது.
https://www.sciencedaily.com/releases/2016/05/160512161100.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral