ஜப்பானிஸ் ஆராய்ச்சி குழு தக்காளி வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆற்றலை பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பச்சை புல்தரைகள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள கோபே பல்கலைக்கழகத்தின் Kunishima Mikiko (இளநிலை மாணவர்), உதவி பேராசிரியர் Yamauchi யாசுவோ, இணை பேராசிரியர் Mizutani Masaharu, பேராசிரியர் Sugimoto Yukihiro, இணை பேராசிரியர் Kuse மசாகி, மற்றும் பேராசிரியர் Takikawa Hirosato ஆகியோர் மிக விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
பெரும்பாலும் பச்சை இலைகள் அதிக ஆற்றல் பெற்றதாக திகழ்கிறது. பச்சை இலைகளில் ஒரு வகை வாசனை திரவியம் இருப்பதால் என்சைம்கள் அதிக அளவு உருவாகிறது. இந்த என்சைம்கள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புல்தரையில் 3-hexenal இருப்பதால் மண்ணின் தன்மையினை ஆற்றல் பெற்றதாக மாற்றுகிறது. மேலும் இது இனிப்பு தக்காளியினை உற்பத்தி செய்கிறது.
அதிகப்படியான என்சைம்கள் மண்ணில் இருப்பதால் பருப்பு வகைத் தாவரங்களுக்கு இது மிக ஏற்றதாக இருக்கிறது. பெரும்பாலும் தக்காளியில் உள்ள என்சைம்கள் செயற்கையாக தாவரத்தில் உள்ள hexenal isomerases தூண்டுகிறது. இதனால் தக்காளியில் சாறுகள் அதிக அளவில் உண்டாகிறது.
https://www.sciencedaily.com/releases/2016/05/160511084248.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral