சீனா மற்றும் ஐக்கிய அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நைட்ரேட் குவிப்பை குறைக்க மேற்கொண்ட ஆய்வில் வெற்றிக் கிடைத்துள்ளது. அவர்களின் ஆய்வுப்படி 24 மணி நேரம் RB LED ஒளி பல்புகளை தாவரங்களுக்கு பயன்படுத்தினால் அதனுடைய வளர்ச்சி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ரோபோனிக்ஸ் soilless நுட்பங்களை பயன்படுத்தி தாவரங்களை அதிக ஆற்றல் பெற்றதாக மாற்றியுள்ளனர். இத்தொழில்நுட்பத்தில் இரசாயன உரப்பயன்பாடு மிக குறைவாகவே தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது நீரும் குறைவாக இருந்தாலே போதும். RB LED ஒளிச்சேர்க்கை கீரை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இலை காய்கறிகளுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் அளவினை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. இந்த ஒளிச்சேர்க்கையில் ஆக்ஸிஜனேற்ற செறிவு அற்புதமாக நடைப்பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளார்கள் சி.எல் சிவப்பு, நீலம், பச்சை நிற பல்புகளை வைத்து கீரையினை வளர்க்க சோதனை செய்தனர்.
அவர்களுடைய ஆய்வுப்படி LED பல்பில் சிவப்பு மற்றும் நீல நிறம் ஒளிச்சேர்க்கை பண்பினை அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆர்.பி. மற்றும் RBG தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் LED மற்றும் சி.எல் பல்புகளின் ஒளி நைட்ரேட் அளவை குறைத்து தாவர வளர்ச்சிக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி கீரையின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
https://www.sciencedaily.com/releases/2016/05/160510103139.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral