சித்தர் பாடல்
நீர்க்கடுப்பு, நீரடைப்பு நீங்காத மேகமுமிவ்
வூர்க்கடுத்து வாராமல் கட்டுங்கான் – பார்க்கவொண்ணா
அற்பவிடை மாதே! அரோசிசர்த்தி யைத் தொலைக்கும்
நற்பசாரைக் கீரயது நன்று.
(பார்த்த குணசிந்தாமணி)
பொருள்
நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு மற்றும் பால்வினை நோய்கள் குணமாகும். அரோசிகம் (அடிக்கடி உண்டாகும் தாகம்) மறையும்.
பசலைக் கீரையின் தன்மை
சிறுநீர்ப்பெருக்கி – Diuretic
பசித்தூண்டி – Stomachic
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகிறது. இதன் பூர்வீகம் அமெரிக்கா, பின் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள். வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும், காய்கறிகளிலும் இயற்கையாக வழங்குகின்றது.
உணவில் பசலைக் கீரையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், கால்சியம் குறைபாட்டால் உண்டாகும் அனைத்து விதமான நோய்களும் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையைப் போக்கும் சிறந்த நிவாரணி இது. நன்கு பசியைத் தூண்டி, உடலைத் தேற்றுவதில் பசலைக் கீரைக்கு நிகர் எதுவும் இல்லை.
பசலைக் கீரையின் மருத்துவப் பயன்கள்
பசலைக் கீரைச் சாற்றில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, அதைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.
பசலைக் கீரைச் சாறு, யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தினமும் காலை மாலை இருவேளையும் சுமார் 60 மி.லி அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும். ஆண்களுக்கு உண்டாகும் இந்திரீய ஒழுக்கும் குணமாகும்.
பசலைக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு இரண்டையும் சம அளவில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். பித்தம் தணியும்.
பசலைக் கீரைச் சாறில், மயில் இறகின் சுட்ட சாம்பலைக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
பசலைக் கீரைச் சாறில் கருப்பு உளுந்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி கஞ்சி காய்ச்சிக் குடித்தால், உடல் வலிமை பெறும். இளைத்த உடலும் பெருக்கும்.
பசலைக் கீரை சாறு (100. மிலி.) மற்றும் இஞ்சிச் சாற்றில் (100.மி.லி) 100 கிராம் கொள்ளை ஊறவைத்து, பிறகு காயவைத்து பொடியாக்கிகொள்ளவும், இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.
பசலைக் கீரைச் சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊறவைத்து, அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
பசலைக் கீரையின் பிற பயன்கள்:
பசலைக் கீரைக் கடைசல், காரக் குழம்பு, கீரை சூப், பசலை டிலைட் என்று எண்ணற்ற பயன்களும் அடங்கியுள்ளன.
100 கிராம் பசலைக் கீரையில் உள்ள சத்துக்கள்
புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மாவுப்பொருள், தையாமின், ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் – சி
நன்றி!
கீரை – ஆரோக்கிய வாழ்வின் சாரம்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral