உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.4 பில்லியன் இந்த ஆண்டு அதிகரித்துவிட்டதாக தகவலறிக்கை கூறுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, நீர் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு உற்பத்தியினை அதிகரிக்க நவீன வேளாண்மையில் வேதியியல் உரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேதியியல் உரத்தை நிலத்தில் பயன்படுத்துவதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடு உலகில் ஏற்படுகிறது.
அதில் மிக முக்கியமானது நாம் நிலத்திற்கு பயன்படுத்தும் உரம் மழை பெய்யும் காலங்களில் நீரில் அடித்து செல்லப்பட்டு சமுத்திரத்தில் கலக்கிறது. இவ்வாறு கலப்பதால் பாசிகளுக்கு பாதிப்பு மற்றும் மீன்களுக்கு அதிக பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் பாஸ்பரஸ் ஆற்றல் அழிந்து வருகிறது. இதற்கு இன்று வரை சரியான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முதல்முறையாக அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு புதிய திட்டத்தினை வகுத்து ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு மனித செயல்பாடுகளினால் பாஸ்பரஸ் குவிப்பு பாதிக்கப்படுகிறது.
இதனை தவிர்க்க மறுசுழற்சி முறையினை கையாண்டுள்ளனர். இவ்வாறு செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் உணவு மற்றும் குடிநீரினை மக்களுக்கு வழங்க முடியும். இந்த சோதனையின் முதல் படியாக ஆராய்ச்சியாளர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பிற்காக மூன்று ஆறுகளின் முகப்பு பகுதியில் பல்வேறு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டது. மேற்கு பகுதியில் இங்கிலாந்தில் உள்ள வடிநில தேம்ஸ் ஆற்றுப் படுகையில் இணைக்கப்பட்டது. இந்த ஆய்வு சுமார் 5,000 முதல் 700,000 சதுர மைல்கள் விரிந்திருந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்று பதிவேடுகளில் பாஸ்பரஸ் இழப்புகளை ஒப்பிட்டு பார்த்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். மனித கழிவுகள், உணவு கழிவுகள் மூலம் பாஸ்பரஸ் பாய்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் விலங்குகளின் எலும்புகள் மற்றும் உணவு கழிவுகள் பெரிய அளவு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. சேறு கழிவு நீர் சுத்திகரிப்பின் போதே தேவை இல்லாத கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு விடுகிறது. குறைந்த உரப்பயன்பாடு சுற்றுச்சூழலினை பாதுகாக்கும். மேலும் பாஸ்பரஸை மறு சுழற்சி செய்தால் கண்டிப்பாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
https://www.sciencedaily.com/releases/2016/04/160411134325.htm
விளம்பரம்
உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?
உடனே தொடர்பு கொள்ளுங்கள்..
சிறப்பான இணையதள சேவைக்கு