மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சோயாபீன்ஸில் ஏற்பட்ட நோய் பாதிப்பு பற்றி ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பற்றி 2014-ம் ஆண்டிலே விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை பற்றி மேலும் 170 துறையினை சார்ந்த விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை அதிக அளவு விளைச்சலை கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் தெற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் தாவரங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
இந்த சிகிச்சை முறையினால் அதிக அளவு மகசூல் கண்டிப்பாக கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை முறையினால் தென் பகுதிகளில் சோயா உற்பத்தி பெருமளவு உயரும். மேலும் பூச்சி தாக்குதலில் இருந்து தாவரத்தை பாதுகாத்து எதிர்காலத்தில் அதிக மகசூலினை பெறுவதற்கு இந்த சிகிச்சை முறை பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.
https://www.sciencedaily.com/releases/2016/04/160418095132.htm
விளம்பரம்
உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?
உடனே தொடர்பு கொள்ளுங்கள்..
சிறப்பான இணையதள சேவைக்கு