Site icon Vivasayam | விவசாயம்

விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

உலக வெப்பமயமாதலுக்காக காரணங்களில் சிலவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விவசாயம் செய்வதால் கரிய மில வாயு அதிக அளவு குறைகிறது. இதனால் வளிமண்டலம் பாதிப்பு அடைவதில்லை. சிறந்த மண் பயன்பாடு காலநிலையினை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவும் என்று கார்னெல் பல்கலைக்கழக ,மண் மற்றும் பயிர் அறிவியல் பேராசிரியர் ஜோதன்னேஸ் லேமான் கூறினார்.

விவசாயம் செய்வதால் மண் பல்லுயிரியை மேம்படுத்த மற்றும் நீர் மாசுபாட்டை குறைக்கிறது. மேலும் கார்பன் மற்றும் நைட்ரஜனை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தற்போது வளிமண்டலத்தில் கார்பன் 830 பெட்டாகிராம் அளவு உள்ளது. (ஒரு பெட்டா கிராம் என்பது 1 டிரில்லியன் கிலோ கிராம்), அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் 10 பெட்டாகிராம் கார்பன் மனிதர்களால் சேர்க்கப்படுகிறது.

மண் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் காலநிலையினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் நல்ல மண்,புல்வெளியினை உருவாக்குவதால் புவி வெப்பம் வெகுவாக குறையும். காலநிலை மாற்றத்தை சீராக வைத்துக்கொள்ள மண் வளத்தை நாம் நிச்சயம் பாதுகாத்தே ஆக வேண்டும்.

பயிர் சுழற்சி முறை மண் வளத்தினை அதிக அளவு பாதுகாக்கிறது. அதனால் கார்பனையும் மேலாண்மை செய்வதால்  வளிமண்டலத்தையும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது.

இயற்கையின் விந்தைகளில் இதுவும் ஒன்று..

https://www.sciencedaily.com/releases/2016/04/160407221447.htm

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

 hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

Exit mobile version