Site icon Vivasayam | விவசாயம்

இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?

ஒரு தலைமுறைக்கு முன்னர் விவசாயம் என்ற வார்த்தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கோதுமை, கரும்பு அறுவடை அபரிவிதமாக இருந்தது. விவசாயிகள் மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை தலைக்கீழாக மாறி தண்ணிர் பஞ்சத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான கடன் சுமையால் விவசாயிகளின் வாரிசுகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வகை பாதிப்பு அதிகமாக மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. இந்த கொடூரமான நிலையினை போக்க இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதியன்று விவசாயத்திற்கு என்று தனியான ஆன்லைன் தளத்தை உருவாக்கியது. இந்த புதிய முயற்சியினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார், இந்த தளத்தின் மூலம் தேசிய வேளாண் சந்தை பற்றிய அனைத்து விவரங்களையும் விவசாயிகள் எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும். மேலும் இதன் மூலம் விவசாய தயாரிப்பு சந்தை குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகள் புதிய பொருட்களின் வருகை, அதன் விலை, விவசாய மேம்பாடு பற்றிய உதவிகள், வர்த்தக சலுகைகள், போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் தற்போது உத்திரபிரதேசம், தெலுங்கானாவில் ஐந்து, குஜராத்தில் மூன்று, ஹரியானா மற்றும் இமாச்சலபிரதேசத்தில் இரண்டு, ராஜஸ்தானில் ஒன்று, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் ஆறு சந்தை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மாநிலங்களில் இதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 2018-க்குள் 585 சந்தைக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் இலட்சியம் ஆகும்.

இந்தியாவில் இ-காமர்ஸ்-ஐ அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். ஆன்லைன் மூலமாக நடுத்தர விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். இதற்கு முன்பு இந்த முயற்சி மிக மெத்தனமாக நடந்தது. ஆனால் தற்போது agmarkets ஆன்லைன் பல்வேறு சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள சந்தை குழு அடிப்படை தரவுகள், நிர்வாக அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் இது வழங்குகிறது. இத்தளத்தின் மூலம் இடைத்தரகர்களை நீக்கி அவர்கள் விற்க வேண்டிய பொருளினை நேரடியாக விற்க இது உதவுகிறது. மேலும் விவசாய தொழிலுக்கான நிபுணர் மற்றும் முதலீட்டாளார்கள், விநியோக சங்கிலி முறைகள் பற்றியும் கூறுகிறது. கரிம விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டியின் நிறுவனர் கூறியதாவது: இந்த  திட்டம் ஏழை விவசாயிகளின் நலனை மேம்படுத்த உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் எழை விவசாயிகள் இலாபம் பெற வேண்டும் என்பதேயாகும்.  APMC விதிகள் விவசாய பொருட்களுக்கு தகுந்த விலையினை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அமெரிக்கா விதிக்கும் வரியினை அகற்ற இந்த அமைப்பு உதவிகரமாக உள்ளது. மேலும் ஆன்லைனில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க இந்திய Grain.org  தளம் உதவும். ஆன்லைனில் பொருட்களை விற்க குறிபிட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அவசியம் தேவை. உதாரணமாக அமெரிக்காவில் உள்ள மழைக்காடு கூட்டணி, பிரேசிலில் உள்ள தோட்டக்கலை அமைப்புகள் போல செயல்பட வேண்டும். அந்தந்த துறைக்கு தகுந்தார் போல் உருவாக்க வேண்டியது மிக அவசியம். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சட்டம். ஆனால் அமெரிக்காவில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டமாக உள்ளது.

அமெரிக்காவை போன்று நமது நாட்டிலும் ஒரே மாதிரியான சட்டம் இருந்தால் நன்றாக இருக்கும். விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆராய்ச்சி தளங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். துல்லிய வேளாண்மை முறை மூலம் விவசாயிகள் நன்மை பெறுவது மட்டுமல்லாமல் நுகர்வோருக்கும் உதவியாக இருக்க வேண்டும். Enam பலகையில் மொட்டை மாடி தோட்டம் பற்றிய செய்திகளை வழங்க வேண்டும். சமீபத்தில் திருத்தப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த மிக உதவியாக இருக்கும். மேலும் தனியார் துறை நிதி உதவிகள் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. மொத்ததில் இந்தியாவில் இ-வணிகம் கண்டிப்பாக நல்ல இலாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டி தரும்.

http://yourstory.com/2016/04/modi-ecommerce-indian-farmer/

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

Exit mobile version