Skip to content

வேர் பூஞ்சைகள் தாவரத்தை பாதுகாக்கிறது

500 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக தாவரத்தினை இயற்கையாக எது பாதுகாக்கிறது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் தற்போது விடை கண்டுபிடித்துள்ளனர். அதுஎன்னவென்றால் வேர் பூஞ்சைகள் தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தாவரங்கள் மற்றும் பூஞ்சை இடையே பரஸ்பர நன்மை உறவு, காலம் காலமாக ஏற்பட்டு வருகிறது என்று தெற்கு டகோட்டா மாநில பல்கலைக்கழக உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல் பேராசிரியர் கூறினார். அவருடைய கருத்துப்படி இரசாயன உரப்பயன்பாடுகள் இனி தாவரங்களுக்கு அதிக அளவு தேவையே இல்லை என்பது தெரியவந்துள்ளது. வேர் பூஞ்சைகள், photosynthetically அதிகரிக்க உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்த பூஞ்சைகள்  கோதுமை, சோளம், சோயாபீன்ஸ், குதிரை மசால், தீவனப்புல் ஆகியவை நன்கு வளர உதவுகிறது.

வேர் பூஞ்சைகள் பெரும்பாலும் அதிக செயல் திறன் கொண்டதாக உள்ளது. பூஞ்சைகள் பெரும்பாலும் தாவரத்திற்கு ஏற்ற உணவினை அதிக அளவு அளிப்பதால் மகசூல் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூஞ்சைகளின் தாக்கம் இரசாயன உரப்பயன்பாட்டை முழவதும் குறைத்து, அதிக இயற்கை சக்தியினை தாவரத்திற்கு கொடுப்பதால் உணவு பொருட்களில் அதிக அளவு ஆற்றல் சக்தி உருவாகிறது.

https://www.sciencedaily.com/releases/2016/04/160408183655.htm

வரி விளம்பரம்

சிறப்பான இணையதள  சேவைக்கு

http://cloudsindia.in/

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj