மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு விவசாயி அவர்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய முறையினை மேற்கொண்டதால் தாவரத்தினை பூச்சி தாக்குதிலிருந்து பாதுகாத்துள்ளார். இந்த விவசாய முறை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அப்பகுதியில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
இதனை பற்றி the Universidad Autónoma Chapingo ஆராய்ச்சி குழு ஆய்வு செய்தது. அவர்களுடைய ஆய்வுப்படி குறிப்பிட்ட இன பூச்சிகள் தாவரத்தினை பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கு பெயர் cochineals என்று அழைக்கப்படுகிறது. இந்த பூச்சி தாவரத்தினை அழிக்கும் பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்வதால் தாவரம் அதிக அளவு பாதிக்கப்படுவதில்லை. Cochineals பூச்சிகள், அனைத்து வகையான வண்டுகள், தீமை தரும் பூச்சிகளை அழித்துவிடும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.
இதனால் இனி பயிர்களுக்கு இரசாயன பூச்சிகளை பயன்படுத்த தேவை இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புதிய முறையினை மேற்கொண்டால் கண்டிப்பாக சுற்றுச்சுழலிற்கு பாதிப்பே ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த Cochineals பூச்சிகளை அதிக அளவு பயன்படுத்தினால் கண்டிப்பாக விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சியினை ஏற்படுத்த முடியும் என்று க்ரூஸ்-ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
https://www.sciencedaily.com/releases/2016/04/160420111235.htm
வரி விளம்பரம்
சிறப்பான இணையதள சேவைக்கு