Skip to content

பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி

இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயிர் களைகளை ஒழிக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளனர். தற்போது விவசாய நிலங்களில் அதிக அளவு இருப்பது களைகளே ஆகும். இந்த களைகளை அகற்ற விஞ்ஞானிகள் புதிய மரபணு களைக்கொல்லியினை உருவாக்கியுள்ளனர். பெரும்பாலும் சோளம், சோயாபீன்ஸ் பயிர்களுக்கு இடையில் waterhemp களைகள் அதிக அளவு காணப்படுகிறது.

இந்த களைகள் அகலமான இலைகளை கொண்டதாக உள்ளது. இந்த களைளை ஒழிக்க அட்ரசின், mesotrione போன்ற களைக்கொல்லிகள் பெரிதும் உதவும். களைகள் பயிர் வளர்ச்சியினை தடுக்கிறது. அதுமட்டுமல்லாது நிலத்தின் தன்மையினையும் கெடுக்கிறது.

களைக்கொல்லி நச்சுகள் பொதுவாக என்சைம்களில் பயன்படுத்துபடுகிறது. என்சைம் மரபணுக்களை வழக்கமாக பாரம்பரிய மரபணு முறைகளை பயன்படுத்தி சோதிக்க முடியும். புதிய முறை களைக்கொல்லி கதிர்வீச்சால் களைகளை ஒழித்துவிடுகிறது. இம் முறையில் களைகள் அதிக அளவு குறைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/04/160407150821.htm

வரி விளம்பரம்

சிறப்பான இணையதள  சேவைக்கு

http://cloudsindia.in/

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj