Site icon Vivasayam | விவசாயம்

நைட்ரஜன் உர பயன்பாடு தாவர வளர்ச்சியினை குறைக்கும்

இல்லினாய்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி நைட்ரஜன் உரப்பயன்பாடு தாவரங்களுக்கு குறைந்த அளவு நன்மையை மட்டுமே கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் மரபணு உள்ள தாவர விதைகள் எதிர்கால பயன்பாட்டிற்கு கண்டிப்பாக உதவாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்த பாதிப்பு தீவனப்புல்,  பீன்ஸ்,  பட்டாணி, சோயாபீன்ஸ், பருப்பு வகைகளில் அதிக அளவு ஏற்படுகிறது. மேலும் இதனை பற்றி ஆய்வு செய்த இல்லினாய்ஸ் ‘பெக்மேன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி ரைசோபியம் மற்றும் தாவரங்கள் இடையே அதிக அளவு உறவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளில் அதிக அளவு நைட்ரஜன் உரப்பயன்பாடு இருப்பதால் அதன் ஆற்றல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தாவரங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது இயற்கை முறை விவசாயமே ஆகும். இயற்கை முறை விவசாயத்தினால் அதிக அளவு நன்மைகள் மண்ணிற்கு கிடைக்கிறது. இதனால் அதன் விதைகள் எதிர்காலத்திலும் நன்மை பயக்கும் விதத்தில் மாறிவிடுகிறது. இந்த மாற்றத்தால் காலநிலையும் சரியாக செயல்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/04/160408163822.htm

வரி விளம்பரம்

சிறப்பான இணையதள  சேவைக்கு

http://cloudsindia.in/

Exit mobile version