கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, கீரைகளில் மிக விஷேசமானது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை.
மருத்துவப் பயன்கள்
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli