Skip to content

பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்!

The UNC School of Medicine ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு இரசாயனத்தை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்தால் அதிக அளவு மனிதன் பாதிக்கப்படுகிறான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் நம் நரம்புமண்டலம் அதிக அளவு பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனால் மன இறுக்கம் ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது என்று மார்க் Zylka கூறினார்.

இதனை மேலும் அறிந்துகொள்ள சுமார் 300 வகையான இரசாயனத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்க புதிய மரபணுக்களை பயன்படுத்துமாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆர்.என்.ஏ வரிசை முறை அடிப்படையில் இரசாயனங்களின் ஆறு தொகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் கெமிக்கல்ஸ் பூச்சிக்கொல்லிகளான ரோடெனோன், Pyridaben, மற்றும் Fenpyroximate, Pyraclostrobin, Trifloxystrobin, Fenamidone, Famoxadone  என்ற பூசண கொல்லிகள் ஒரு புதிய வர்க்கம் பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பூச்சிக்கொல்லி பயன்பாடுகளினால்  நியூரான்கள் இடையே ஏற்படும் மாற்றத்தை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இராசாயன பாதிப்பால் நரம்பு மண்டலத்தில் உள்ள அழற்சி மரபணுக்கள் அதிக அளவு உருவாகும். இதற்கு Neuroinflammation என்று பெயரிட்டுள்ளனர். இந்த நோயினால் மனிதனுக்கு அதிக மனஇறுக்கம் ஏற்படும்.

செல்களின் அடிப்படை கட்டுமான தொகுதிகளை சேதப்படுத்தி மூளை நோயினை உண்டாக்கும் மேலும் நியூரான் குழாய் பாதிக்கப்படும். நியூரான் பாதிக்கப்படுவதால் நியூரோடெவலப்மெண்ட்டல் கோளாறுகள் ஏற்படலாம். புற்று நோய் அதிக அளவு ஏற்படும். கடந்த 2015 ஆய்வுப்படி பூச்சிக்கொல்லி பயன்பாட்டினால் தேனீக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகரந்த சேர்க்கை பணி அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. பசலை கீரை, மற்றும் பழ வகைகளில் பூச்சிகொல்லி மருந்தினை அதிக அளவு பயன்படுத்தாமல் இருந்தால் நமக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படாது. விளைச்சளை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் நம் உடல்தான் அதிக அளவு பாதிக்கப்டுகிறது. பெரும்பாலும் தற்போது நாம் உண்ணும் உணவில் அதிக அளவு இரசாயனம் கலந்துள்ளதாலேயே மன உளைச்சலுக்கு நாம் அதிக அளவு உட்படுகிறோம். இதற்கு ஒரே வழி இயற்கை உரம் பயன்பாடு மட்டுமே!.

https://www.sciencedaily.com/releases/2016/03/160331082500.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj