உலக அளவில் இன்று வரை 3.5 பில்லியன் மக்கள் அரிசியினையே பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது விஞ்ஞானிகள் அதிக விளைச்சல் தரும் கலப்பினத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கலப்பினம் கடந்த 1970-ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசி வகைகள் மகரந்த சேர்க்கை அதிக அளவு நடைப்பெற உதவுகிறது.
அதிக அளவிலான அரிசி வகைகள் பெரும்பாலும் சீனாவில்தான் பயிரிடப்படுகிறது. ஆனால் இந்த அரிசி வகைகளில் பேனிக்கள் அதிக அளவு உருவாகிறது. இதனால் நெல் பயிரின் இலைகள் சுருட்டு வடிவில் மாறிவிடுகிறது. மேலும் தண்டு பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் மகரந்த சேர்க்கை பணி அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய தற்போது விஞ்ஞானிகள் INTERNODE1 (EUI1) விதையினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது புதிய மூலக்கூறுகளை பயிருக்கு அளிப்பதால் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் தாவரம் அதிக வளர்ச்சி பெறுகிறது. மேலும், HOX12 மரபணு நெல் விதைகள் புதிய மரபணுவினை பயிருக்கு அளிப்பதால் நெல் மகசூல் பன்மடங்கு அதிகரிக்க உதவுகிறது. இது தண்டிற்கு அதிக ஆற்றலினை அளிக்கிறது. மேலும் இந்த வகை நெல் விதைகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிருக்கு பாதுகாப்பையும் அளிக்கிறது.
https://www.sciencedaily.com/releases/2016/04/160401144547.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli
hello sir i want that full name this (INTERNODE1 (EUI1) விதை)
in local name of in tamilnadu