Site icon Vivasayam | விவசாயம்

துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு!

உவர் நிலம் என்பது லேசான அழுக்குத்துணியைப் போன்றது. அதில் லேசாக, உப்பு இருக்கும். ஆனால், நீரில் கரையும் தன்மையுடன் மண் துகள்களில் தொட்டும் தொடாமலும் இருக்கும். இந்த மண்ணில் நல்ல தண்ணீரைப் பாய்ச்சி வடித்தாலோ, மழைக் காலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்தாலோ உப்பு தானாகவே சரியாகி விடும்.

அழுக்கில்லாத துணி சீக்கிரம் நனையும், காற்றில் காயும். அதுபோல உப்பு இல்லாத  நிலம் சிக்கிரம் நனையும், காற்றில் காயும். களர்நிலம் என்பது அழுக்குப் பிடித்த பிசுபிசுப்பான துணியைப் போன்றது. துணி இழைகளிடையே அழுக்குகள் அடைத்துக் கொண்டிருக்கும். அதேபோல், மண் துகள்களுக்கு இடையே உப்பு அடைத்துக் கொண்டிருக்கும்.

அழுக்குத் துணிக்கு சோப்பு போடுவது போல களர் நிலத்துக்கு ஜிப்சம் போட வேண்டும். அழுக்கு, இல்லாத துணிக்கு நீலம் போட்டால்தான் வெண்மை நிறம் கிடைக்கும். அதுபோல உப்பு இல்லாத நிலத்துக்கு சத்தான உரம் போட்டால் அதிக மகசூல் கிடைக்கும்.

                                                                   நன்றி

                                                          பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/detailsid=com.Aapp.UlagaTamilOli      

 

Exit mobile version