தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் தற்போது வரும் கோடை காலத்தில் மின்சார தேவை அதிகமாகும். இதனை ஈடு செய்ய அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி விஞ்ஞானிகள் தக்காளியிலிருந்து அதுவும் அழுகிய தக்காளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
தூக்கி போடப்பட்ட தக்காளியில் உள்ள இரசாயன எதிர்வினையினை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க உள்ளனர். தக்காளியில் உள்ள மாசுபட்ட திட கழிவு நீர், மின்சாரம் தயாரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர் நமீதா ஷ்ரேஷ்டா கூறினார். ஆராய்ச்சியாளர்கள் தக்காளியில் உள்ள சிறப்பு பாக்டீரியா ஒரு செல் தக்காளி கழிவினை வைத்து எலக்ட்ரான்களை உருவாக்கி கிட்டதட்ட ஒரு பேட்டரி போன்று மின் வேதியியல் செல்லினை உருவாக்க முடியும்.
இந்த புதிய முறையினை பயன்படுத்தி புளோரிடாவில் உள்ள ஆண்டு தக்காளி கழிவுகளிலிருந்து (396,000) 90 நாட்களில் மின்சாரம் தயாரிக்கின்றனர். தக்காளி கழிவு 10 மி.கிராமில் 0.3 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இவ்வாறு தக்காளி கழிவினை மறுசுழற்சி செய்வதால் மீத்தேன் பாதிப்பு இருக்காது. இதனால் கார்பன் அளவு ஒரே சீராக இருக்கும்.
http://www.popsci.com/tomato-waste-could-provide
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli