Site icon Vivasayam | விவசாயம்

இனிப்பு சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்

இல்லினாய்ஸ் மற்றும் யுஎஸ்டிஏ விவசாய ஆராய்ச்சி சேவை தற்போது தாவரங்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பூ மற்றும் தாவரங்களின் பூக்கும் காலங்கள் மாறுபாடு அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இனிப்பு சோளம் மட்டும் இந்த பாதிப்பிற்கு உட்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி ஆய்வு செய்தபோது, அந்த சோளத்தின் மரபணுதான் இதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த மரபணுவினை வைத்துக் கொண்டு புதிய இனங்களை கண்டறிய உள்ளதாக ஆராய்ச்சியாளர் Eunsoo Choe யூ கூறினார். இந்த மரபணுவினை வைத்து வீரிய ஒட்டு இனத்தினை உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆராய்ச்சியாளர்கள் ஆறு கலப்பின மரபணுக்களை வைத்து புதிய இனங்களை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த இனங்களில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால் வளர்சிதை தொடர்புடைய மரபணுக்கள் அதிக விளைச்சல் தரும் கலப்பினங்களில் பரவி உள்ளது என்று  ஆராய்ச்சியாளர் Eunsoo Choe யூ கூறினார்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160315132130.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version