Skip to content

நவீன  சோள  கலப்பினம்

விஞ்ஞானிகள் தற்போது புதிய சோள கலப்பினத்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கலப்பின விதை அதிக வளர்ச்சி கொண்டதாக உள்ளது. 86 துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பிறகு இந்த புதிய கலப்பினம் உருவாக்கப்பட்டது.

1990-க்கு பிறகு வெளியிடப்பட்ட agronomists சோள விதை அதிக ஆற்றல் பெற்றதாக உள்ளது. நவீன கலப்பினங்களுக்கு நைட்ரஜன் அளவு மிக குறைவாகவே தேவைப்படுகிறது. இந்த சோளம் அதிக மகசூலினை குறைந்த காலத்தில் ஈட்டி தருகிறது. நைட்ரஜன் தாவரத்திற்கு புரதங்களை அளிக்கிறது. நைட்ரஜன் மண்ணினை வளமாக்குகிறது.

விலையுயர்ந்த உரப்பயன்பாடு சுற்றுச்சூழலினை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இதனை ஈடுகட்டவே நவீன கலப்பின சோளத்தினை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனால் ஏக்கருக்கு 30,000 பயிர்கள் வளருகிறது. சாதாரணமான சோளம் 20,000 பயிர்கள் ஏக்கருக்கு விளையும். நவீன கலப்பினத்தில் நைட்ரஜன் பயன்பாடுகள் மிக குறைந்த அளவே தேவைப்படுகிறது. இதனை அறிய 43 சோதனைகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இதேப் போல சீனாவிலும் ஆய்வு மேற்கொள்ளபட்டது.

https://www.sciencedaily.com/releases/2016/03/160309182807.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj