பொதுவாக கருகல் பேரழிவு, பாக்டீரியா நோயினால் உண்டாவதே ஆகும். இதனால் உலகம் முழுவதும் பீன்ஸ் பயிர்களின் மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. இந்த கருகல் பாதிப்பு இரு வெப்பமண்டல பகுதிகளில் விரிவடைகிறது.
தற்போது தாவரங்களுக்கு மிக அதிகமான பாதிப்பு இந்த கருகல் நோய் பாதிப்பாலே ஏற்படுகிறது என்று இடாஹோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீ சிங் கூறினார். பொதுவாக இந்த கருகல் நோய் ஸாந்தோமோனாஸ் பேரினத்தைச் சேர்ந்த இரண்டு பாக்டீரிய இனங்களால் ஏற்படுகிறது. இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம் அசுத்தமான விதையினை பயன்படுத்துவதே ஆகும்.
மேலும் பீன்ஸ் அறுவடை செய்த பிறகு செடியினை அப்படியே விட்டு விடுவதால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இரசாயன சிகிச்சை இந்த பாதிப்பை குறைக்க உதவும். மேலும் எதிர்ப்பு மரபணுக்களை பயன்படுத்தினால் இந்த நோயின் தாக்கத்தை குறைக்கலாம் என்று ஸ்ரீ சிங் கூறினார்.
https://www.sciencedaily.com/releases/2016/03/160309130135.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli