Site icon Vivasayam | விவசாயம்

பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி

உலகில்  உள்ள  தலை  சிறந்த விஞ்ஞானிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு போதிய உணவு மற்றும் எரிபொருள் தேவையினை ஈடு செய்ய புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  உலகில் தற்போது 4% விவசாய நிலம் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள நிலங்களிலிருந்து உயிரி எரிபொருளுக்காக 3 முதல் 4 சதவீத நிலத்தடி நீரினை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஊட்டச் சத்து இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என்று இந்த மாதம் 3-ம் தேதி இயற்கை இதழ் தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது உலக மக்கள் தொகை 7.4 பில்லியன் உள்ளது. இது இந்த நூற்றாண்டின் மத்தியில் 9 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் எரிபொருள் தேவை பெருகும் மற்றும் உணவு தேவையும் அதிகரிக்கும். இதனை ஈடு செய்ய உயிரி எரிபொருள் உற்பத்தியினை அதிகரித்தால் அதிக  நன்மைகள் கிடைக்கும் என்று விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் பவுலோ டி Odorico கூறினார். இதனால் நிலம் மற்றும் நீர் வளங்கள் அதிக அளவு பெருகும்.

தற்போது வரை உயிரி எரிபொருளினை போக்குவரத்து துறைக்கு 10 சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர். உயிரி எரிபொருள் சக்தி பயன்படுத்துவதால் சுமார் 6.7 பில்லியன் மக்களின் உணவு தேவை பூர்த்தியாகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உயிரி எரிபொருள் நுகர்வு விகிதங்களை ஆய்வு செய்தது. அதன்படி உயிரி எரிபொருள் ஆற்றல் நீர் மற்றும் நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டது. உயிரிசக்தி பயன்பாடு விவசாயத்திற்கு மிக அதிக அளவில் உதவியாக இருக்கும். இந்த முறையினை பயன்படுத்தினால் உலக மக்களில் 280 பில்லியன் மக்களுக்கு கண்டிப்பாக உணவளிக்க முடியும். இந்த இயற்கை எரிபொருள் பயன்பாடு வரையறுக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் வளங்களுக்கு ஏற்ப போதுமான போட்டியாக கண்டிப்பாக இருக்கும் என்று டி ‘Odorico கூறினார்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160303133614.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version