தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்ஸிக்கோவில் இதனுடைய எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது.
இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் கிழக்கு வட அமெரிக்காவில் ஏற்பட்ட அதிக அளவு வெப்பமே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதேப் போல கனடாவிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அப்பகுதிகளில் நிலவும் குளிர்ந்த காலநிலையே ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிட்டதட்ட 10 ஏக்கர் அளவில் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை அமெரிக்காவின் வடக்கு பகுதியில் குறைந்துள்ளது.
1996-ல் 44.5 ஏக்கர் பரப்பளவில் பட்டாம்பூச்சிகள் இருந்தது. 2013-2014-ல் 1.6 ஏக்கர் அளவில் மோனோரிச் பட்டாம்பூச்சிகள் இருந்தது. ஆனால் ஒட்டு மொத்தமாக ஆய்வு செய்து பார்த்தால் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்று அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை இயக்குனர் டேனியல் ஆஷ் கூறினார்.
http://www.popsci.com/monarch-butterfly-population-revives-after-years-low-numbers
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli