Skip to content

பூக்களின் வண்ணங்களை பொறுத்து தேனீக்களின் எண்ணிக்கை

பிளாண்ட் சயின்சஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக டாக்டர் ஹீத்தர் மற்றும் விட்னி கேம்பிரிட்ஜ் துறை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெவர்லி குளோவர் ஆகியோர் இணைந்து தேனீக்கள் பற்றிய ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பூக்களின் வண்ணத்திற்கு ஏற்ப தேனீக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் கண்டுபிடிப்பின்படி ஊதா பூக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தேனீக்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பது தெரியவந்துள்ளது. தேனீக்கள் நுட்பமான முறையில் பூக்களினை தேர்வு செய்து தேனை எடுக்கிறது. ஒவ்வொரு மலரின் தன்மைக்கு ஏற்றார் போல் தேனீக்கள் மாறுபடுகிறது.

வானவில்லில் இருப்பது போன்ற வண்ணங்கள் அடங்கிய பூக்களினை மிக எளிதாக தேனீக்கள் மூலம் கண்டுபிடித்து விடலாம். தேனீ எந்த பூவில் அதிகம் தேன் இருக்கிறது என்பதை தெளிவாக கண்டுபிடித்து விடும். பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் நீல நிற பூக்களில் அதிகம் தேன் இருப்பது தெரிய வந்துள்ளது. தேனீக்கள் மகரந்த சேர்க்கை பணியினை மிக எளிதாக செய்து முடிக்கிறது.

https://www.sciencedaily.com/releases/2016/02/160225135708.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj