தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள காடுகள் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. காடுகள் அழிந்து வருவதால் co2 அளவும் தற்போது அதிகரித்துள்ளது. ஒரு அடர்த்தியான காடு உருவாக 1000 ஆண்டுகள் ஆகிறது. இத்தகைய காட்டு வளம் தற்போது அழிந்து வருகிறது. இதனை தடுக்கவே 3d காடுகளை உருவாக்க உள்ளதாக அமெரிக்க, ரஷ்யா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
3d- யை பயன்படுத்தி 100 × 100 மீட்டர் பகுதியில் நிழலிலேயே வளரக்கூடிய மரங்களை சாலை ஓரங்களில் வளர்க்க திட்டமிட்டுள்ளனர். இந்த மரங்களின் இலைகள் சூரிய ஒளியினை தாங்கக்கூடிய அளவிற்கு உருவாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வட அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் காட்டுத்தீ தொந்தரவுகள் அதிக அளவு ஏற்படுகிறது. இந்த சூழலில் 3d பயன்பாடு அதிக வெற்றியினை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
https://www.sciencedaily.com/releases/2016/02/160224151406.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli