அமெரிக்க University of Illinois College of Agricultural, Consumer and Environmental Sciences (ACES) ஆராயச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சோயா பீன்ஸ் விதையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 25 வகையான விதையினை கண்டறிந்துள்ளனர்.
இந்த விதைகள் அட்ச ரேகை பகுதிகளில் மிகச்சிறப்பாக வளர்ந்து அதிக விளைச்சலினை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த விதைகள் அதிக நோய் எதிர்ப்பு சத்தினை பெற்றுள்ளதாக ஆய்வளர்கள் கூறுகின்றனர். இந்த புதிய இரகங்களை இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பொருளாதார வல்லுனர் பீட்டர் கோல்ட்ஸ்மித் மற்றும் USAID இன் சோயா புத்துருவாக்க ஆய்வகம் முக்கிய புலன் விசாரணை செய்தது. இதில் நல்ல முடிவுகள் வெளிவந்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டே ஆப்பிரிக்க விவசாய தொழில்நுட்ப அறக்கட்டளை மற்றும் அதன் தாய் நிறுவனமான Syngenta அறக்கட்டளை இணைந்து சோயா விதையினை ஆப்பிரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த விதையினை ஆப்பிரிக்கா முழுவதும் பயிரிட உள்ளதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விதையினை கென்யா, மலாவி மற்றும் சாம்பியா உட்பட 12 இடங்களில் சோதித்து பார்த்ததில் 25 வகையான விதைகள் பயிரிட மிகவும் ஏற்றது என்பதினை கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி பல வகையான சோதனைகள் செய்யப்பட்டதில் agronomics விதைகளில் அதிக நோய் எதிர்ப்பு சத்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விதைகள் ஆப்பிரிக்க விவசாயிகளின் வறுமையினை கண்டிப்பாக போக்கும் என்று கோல்ட்ஸ்மித் கூறினார்.
https://www.sciencedaily.com/releases/2016/02/160218133601.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli