தாவரங்களில் பூத்தல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். ஏனெனில் இந்த பூத்தல் நிகழ்வின் மூலமாக தான் விதை உண்டாகும் அதுவே ஒரு தாவரம் அடுத்த தலைமுறைக்கு செல்ல வழிவகுக்கும்.
தற்போது சோதனையின் மூலம் ஒளி மற்றும் வெப்பநிலையை பயன்படுத்தி, தாவரத்தில் செயற்கையாக இலைகள் மற்றும் பூக்களை பூக்கச் செய்துள்ளனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இதைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வானது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறையின் இணை பேராசிரியரான யு ஹாவ் தலையில் நடைபெறுகிறது. இது சாதாரண ஒளி நிலைமையில் பூக்கும் என கண்டறிந்துள்ளனர்.
இந்த அணியின் கண்டுபிடிப்புகள் ஏப்ரல் 17 இணையத்தில் open-access journal PLoS Biology. என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். தாவரங்களில் பூக்கும் செயலை செயல்படுத்தும் உறுப்பை அடையாளம் காண, பேராசிரியர் யூமற்றும் அவரது சக ஆய்வாளர்கள் ஐந்து வருடங்களாக ஆய்வை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தாவரங்களில் உள்ள புரோட்டீன்களை கண்டறிய ஈஸ்ட் இரண்டு-ஹைப்ரிட்ஸ்கிரீனிங் முறையை பயன்படுத்தினர். சுமார் 3 மில்லியன் மாதிரிகளை ஆராய்ச்சி செய்த பிறகு dubbed FT-INTERACTING PROTEIN 1 (FTIP1). என்ற மூலக்கூறை அடையாளம் கண்டறிந்தனர். ஆய்வாளர்கள் FTIP1 மரபணு மூலம் சடுதிமாற்ற தாவரங்கள் சாதாரண ஒளி நிலைமையில் பூக்கும் என கண்டறிந்துள்ளனர். (நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் ஒளி)
இந்த கண்டுபிடிப்பு FTIP1 மூலக்கூறானது ஒளியின் மூலம் எப்படி பூக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது என்பதை பற்றி கூறுகிறது. மேலும் இந்த மரபணுக்களின் மூலம், மூலக்கூறுகளை அடையாளம் காணவும், விரும்பத்தக்க பாரம்பரிய இனப்பெருக்க மூலக்கூறு மூலம் பூக்கும் பண்பை மாற்றியமைக்கவும் முடியும்., இதன் முக்கிய நோக்கம் பயிர் மகசூலை அதிகப்படுத்துவதும் சுற்றுசூழலை மாற்றியமைப்பதாகும்.
மேலும் யூ மற்றும் அவரது அணியின் பின்வரும் ஆய்வுகள், FTIP1 போன்ற புரதங்களை கண்டறிதல் மற்றும் தாவர வளர்ச்சி செயல் முறைகளை மேம்படுத்துவது ஆகும். அவர்கள் தற்போது மற்ற பூக்கும் காரணிகளை மேம்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
https://www.sciencedaily.com/releases/2012/04/120417221825.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli