பீவர் சூழலியல் மற்றும் வாழ்விட பொறியியல் அமைப்பு சுற்றுச்சூழல் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடந்த 2002-லிருந்து மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் பல்லுயிர் மாசுக்களை குறைக்க வேண்டும் என்பதேயாகும்.
ஸ்காட்டிஷ் கிராமப்புறங்களில் 13 ஹெக்டேர் அளவிற்கு விஞ்ஞானிகள் நீரோடைகளை ஆய்வு செய்தனர். இங்கு ஆய்வு 2003-ல் இருந்து நடந்து வருகிறது என்று விஞ்ஞானி ஸ்டிர்லிங் கூறினார். அவர்களுடைய ஆய்வு படி, நீர் நிலைகள் பல நன்மைகளை வழங்குகிறது என்பது கண்டறியப்பட்டது. அவர்களுடைய ஆய்வு படி நீரோடைகளில் அணை கட்டுவதால் பல்வேறு வகையான நன்மைகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதனால் நீர்வாழ் உயிரினங்கள் 20 மடங்கு பாதுகாப்புடன் இருக்கும். மேலும் 40 சதவீதம் விவசாய மாசுபாடு குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உள்ளூர் நீரோடைகளில் அணைகள் கட்டுவதினால் பல்லுயிர் பெருக்கம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
https://www.sciencedaily.com/releases/2016/02/160216143059.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli