Site icon Vivasayam | விவசாயம்

காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது

நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தக்காளி தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காட்டு தக்காளி தாவரங்கள் அதிக ஆற்றலை இயற்கையாக பெற்றிருப்பதால் எந்த நோய் தாக்குதலுக்கும் இந்த தாவரம் பாதிக்கப்படுவதில்லை.

காட்டு தக்காளி இயற்கையாகவே பூச்சி தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. இதில் இரட்டை எதிர்ப்பு சத்து ஆற்றல் அதிகம் இருப்பதால் தன்னை தானே பாதுகாத்துக் கொள்கிறது என்று நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் மெக்டேனியல் கூறுகிறார். காட்டு தக்காளியில் பூச்சி கட்டுப்பாடு அதிக அளவு இருப்பதால் நீண்ட நாட்களுக்கு அதன் விளைச்சல் இருக்கும்.

இதனால் வர்த்தகம் அதிக அளவு நடைபெறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தக்காளியின் மரபணு சூப்பர் தக்காளியினை உற்பத்தி செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தக்காளி பயிர்களில் ஏற்படும் வெள்ளை பூச்சிகளினை கட்டுபடுத்த உயிர்ம கட்டுப்பாடு முறைகளை மேற்கொண்டால் பூச்சி தாக்கத்தை குறைக்க முடியும்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160209221200.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

.

Exit mobile version