Site icon Vivasayam | விவசாயம்

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று 39 இனத்தை சேர்ந்த 140 விலங்குகளில் பிரச்சனையை சிறந்த முறையில் தீர்க்கும் விலங்கு எது என்பதை ஆராய்ச்சி செய்தனர்.

இந்த ஆய்வில் போலார் கரடிகள், ஆர்க்டிக் நரிகள், புலிகள், நதியின் நீர் நாய்கள், ஓநாய்கள், புள்ளிமான்கள் கழுதைப்புலி மற்றும் binturongs, பனி சிறுத்தைப்புலிகள் மற்றும் வால்வரின்களில் சில அறிய, கவர்ச்சியான இனங்கள் இடம்பெற்றன.

ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு மூடிய உலோக பெட்டியில் இருந்து உணவு பெறுவதற்காக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. உணவை பெற ஒரு விலங்கு, கதவை திறக்க ஒரு ஆணி தாழ்ப்பாள், சரியும் படி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆய்வில் முக்கியமாக சிறிய மூளை அளவை உடைய விலங்கு இனங்களை விட பெரிய மூளை அளவை உடைய விலங்குகள் அதிகமாக வெற்றிபெற்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இறுதியாக ஆராய்ச்சியாளர்கள் பெரிய மூளையை உடைய விலங்குகளே சிறந்த முறையில் பிரச்சனைகளை தீர்க்கின்றன என்று கண்டறிந்தனர்.

http://post.jagran.com/animals-with-larger-brains-are-better-problem-solvers-1453874725

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version