Site icon Vivasayam | விவசாயம்

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர் மூலம் ஏர் கம்ப்ரசரை பயன்படுத்தி நிலத்தில் உள்ள களைகளை மிக எளிதாக அகற்ற முடியும்.

அதுமட்டுமல்லாது இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மக்காச்சோளம், சோயாபீன்ஸ் செடிகளில் உள்ள களைகளையும் எளிதாக எடுக்க முடியும். இது மேலும் தக்காளி, மிளகு பயிர்களில் உள்ள களைகளையும் மிக எளிதாக எடுக்க உதவுகிறது. இந்த கருவியினை பயன்படுத்தி களைகளை எடுத்ததால் 33 முதல் 44 சதவீதம் வரையில் தக்காளி பழ விளைச்சல் அதிகரித்தள்ளது  என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கருவியினை பயன்படுத்தி களைகளை நிலத்திலிருந்து எடுக்கும்போது நன்மை தரும் களைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. இந்த கருவியினை பயன்படுத்தி 31 ஏக்கரில் 94 பவுண்ட் களைகளை எடுக்க முடியுமாம்.

http://www.sciencedaily.com/releases/2016/01/160121130658.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version