தைல மரம்
தண்டு துளைப்பான்
தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள் கொட்டிக் கிடக்கும். அலுமினியம், பாஸ்பைடு மாத்திரை ஒன்றைத் துளைக்குள் போட்டு, களிமண் கொண்டு மூடி வைத்து உள்ளே இருக்கும் புழுக்களை அழிக்கலாம்.
கறையான்
கறையானின் பூச்சியியல் பெயர் மைக்ரோடெர்மஸ் மற்றும் ஓடென்டோடெர்மஸ் ஆகும், வேர்களை அரித்துத் தின்று மரங்களை வாடச் செய்யும். இதைத் தடுக்க லிண்டேன் திரவ மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி என்ற அளவில் கலந்து மரத்திற்கு 1 முதல் 2 லிட்டர் ஊற்ற வேண்டும்.
சில சமயங்களில் இலைகள் லெபிடாப்டிரஸ் கம்பளிப் புழுக்களால் வெட்டப்பட்டு காசு வடிவத்தில் ஓட்டைகள் காணப்படும். இதனைத் தடுக்க எண்டோசல்பான் 3 மி.லி அல்லது நுவக்கிரான் 1 மி.லி மருந்தை 1 லிட்டர் நீரில் கரைத்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். மேலும் இலைகளின் விளிம்பைச் சுற்றிலும் வெட்டுக் கிளிகளின் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குருத்து வண்டுகள் மரக் குருத்துகளைத் தாக்குகின்றன.
வேப்ப மரம்
செதிள் பூச்சியின் பூச்சியியல் பெயர் பல்விநேரியா மேக்ஸ்சிமா ஆகும், இலைகளின் அடிப்பகுதியில் பறவைகளின் எச்சம் போன்று வெண்மையாக ஒட்டிக்கொண்டிருக்கும் பூச்சிகள் சாற்றை உறிஞ்சி இலைகளை மஞ்சளாக்கி உதிரச் செய்யும்.
மாவுப் பூச்சி
மாவுப் பூச்சியின் பெயர் சூடோக்காக்கஸ் ஆகும். நாற்றங்காலிலும், வளர்ந்த மரங்களிலும் காணப்படும் வெண்ணிற மாவுபோன்ற இப்பூச்சிகள் சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
ஜீவின் வண்டுகள்
ஜீன் வண்டின் பூச்சியியல் பெயர் ஹோலோடிரைக்யா ஆகும், பருவ மழை (ஜூன்) மாதங்களில் இவ்வகை வண்டுகள் இரவில் இலைகளைக் கடித்துச் சேதப்படுத்தும்.
தேயிலைக் கொசு
இதன் பூச்சியியல் பெயர் ஹீலோபெல்டிஸ் ஆண்டோனி ஆகும். குளிர்காலங்களில் இக்கொசு போன்ற பூச்சிகள் சாற்றை உறிஞ்சி இளந்தளிர்கள் சிறுகிளைகள், இலைகள், தண்டுகளை உலர்ந்து விடச் செய்கின்றன. இப்பூச்சி தேயிலை மற்றும் முந்திரி மரத்தையும் தாக்கும்.
இளந்தண்டு துளைப்பான்
இளந்தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் லேஸ்பைரீசியா ஒளரேன்சியா ஆகும். இளந்தண்டுகளை இப்புழுக்கள் துளைத்து வாடச் செய்யும். இதன் தாக்குதல் கோடை முடிவில் ஆரம்பித்து, குளிர்காலத் தொடக்கம் வரை நீடிக்கும்.
அனைத்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி எண்டோசல்பான் அல்லது மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க வேண்டும். ஆஸ்திரிபிட் வண்டுகள் விதைகளைத் துளையிட்டுத் தாக்குகின்றன.
நன்றி
வேளாண் காடுகள்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli