Skip to content

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த நோய் முதன் முதலில் 1890-ம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இந்த நோய் கொடியின் நிறத்தை பழுப்பு நிறமாக மாற்றி விடுகிறது இந்த நோய் sharpshooters என்று அழைக்கப்படும் சிறிய சிறகு பூச்சிகளால் ஒரு கொடியில் இருந்து மற்றொரு கொடிக்கு பரவுகிறது. இதனை சரிசெய்வதற்கு புதிய நொதியினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக முந்திரி செடிகளில் இருந்துதான் திராட்சை செடிக்கு இந்த நோய் பரவுகிறது. இந்த நோயால் செடியின் அனைத்து சத்துகளும் பாதிப்படைகிறது. இலைகளின் நீரோட்டத்தையும் பாதிக்கிறது. இந்நோய் பல தாவர நோய்களை  தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு Lesa என்ற ஒரு நொதி உதவும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

Lesa நொதி, செல் சவ்வு இலைகளின் வழியாக கொடி மீது பரவும்போது Xyllela fastidiosa பாக்டீரியாவை தாக்கி  லிபிட்கள் என்று fatlike மரவிய  திசுக்களின் கலவையினை கொடிக்கு அளிக்கிறது. இதனால் பியர்ஸ் நோய் தீர்ந்து கொடி நன்றாக வளர்ச்சி அடையும்.

http://www.sciencedaily.com/releases/2016/01/160112091403.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj