Skip to content

தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தேக்கு மரம்

4

தேக்கு மரத்தை இலைப்புழு, இலை சுரண்டும் புழு, தண்டு துளைப்பான்கள் நீள் கொம்பு வண்டு, கூன் வண்டு, இலவ மர அத்துப்பூச்சி, பட்டைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மலர்கள் மற்றும் விதைகளைத் தாக்கும் பூச்சிகளும் தாக்கி கணிசமான அளவில் மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

இலைப்புழு

இலைப்புழுவின் பூச்சியியல் பெயர் ஹைபிளேயா பியூரா ஆகும். இந்தப் புழு அழுக்கடைந்த பச்சைநிற உடலில் மங்கலான கோடுகளுடன் காணப்படும். தாய்ப்பூச்சியின் தலை மற்றும் மார்புப் பகுதி செம்பழுப்பு நிறமாகவும், வயிற்றுப்பகுதி பழுப்புநிறத்தில் ஆரஞ்சுநிறக் கோடுகளுடனும் காணப்படும். முன்னிறகுகள் செம்பழுப்புநிறத்திலும், பின்னிறகுகள் பழுப்புநிறத்தில் ஆரஞ்சுநிற ஓரங்களுடனும் இருக்கும். புழுக்களால் முதிர்ந்த இலைகள் சல்லடை போல் அரித்துத் தின்னப்பட்டிருக்கும்.

இலை அரிப்பான்

இலை அரிப்பானின் பூச்சியியல் பெயர் ஹபாலியா மேச்சராலிஸ் ஆகும். இப்புழுவின் பச்சைநிற உடலில் நீளவாக்கில் பழுப்புநிறக் கோடுகள் இருக்கும். தாய்ப்பூச்சியின் மஞ்சள்நிற இறக்கையில் இளஞ்சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்.

இலைச்சுருட்டுப் புழு

இலைச்சுருட்டுப் புழுவின் பூச்சியியல் பெயர் சைலப்டாஸ்ராமினியா ஆகும். இது இலைகளைச் சுருட்டி, அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டித் தின்னும்.

மூங்கில் மரம்

5

தண்டு மூங்கில் மரத்தின் துளைப்பான்கள் மற்றும் கூன்வண்டுகள் இளங்கிளையைத் தாக்குகிறது. சில இலைப்புழுக்கள் இலைகளைத் துளைத்து சேதம் விளைவிக்கிறது. மூங்கில் கிழங்குகளை வறட்சிக்காலங்களில் எலி மற்றும் கரையான்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.

தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் இஸ்டிக்மினா கைனென்சிஸ் ஆகும். பழுப்புநிற தாய் வண்டுகள் சுமார் 1.5 செ.மீ. நீளம் இருக்கும். பூச்சி தாக்கிய இடைக்கணுக்களில் துவாரம் காணப்படும்.

இளந்தண்டு கூன் வண்டு

இளந்தண்டு கூன் வண்டின் பூச்சியியல் சிர்டோடிரேகிலஸ்டக்ஸ் ஆகும். கூன்வண்டின் செம்பழுப்பு நிற இறக்கையின் ஓரங்கள் கறுப்பு நிறமாக இருக்கும். பெண் பூச்சியை விட ஆண் பூச்சியின் இறக்கை நீளமாக இருக்கும். இப்பூச்சி முளைத்து வளரும் இளந்தண்டுகளில் துவாரங்கள் காணப்படும்

கறையான்

கறையான் பூமிக்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு பல வகைகளில் சேதத்தை. விளைவிக்கிறது. நீண்ட காலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாமல், ஈரம் குறைந்து வறண்டு காணப்படும் நிலப்பகுதிகளில் கறையான்கள் தோன்றி பரவ ஆரம்பிக்கின்றன. ஒரு புற்றில் 8000 முதல் 12000 கறையான்கள் வரை இருக்கும். அவற்றுள் பத்தில் ஒன்பது வேலைக்காரக் கறையான்களாகவும் இருக்கும். கறையான் புற்றிலிருந்து ஆண்டிற்கு 7 முதல் 8 முறை ஒட்டு மொத்தமாகப் புற்றீசலாய்க் கிளம்பி பிற இடங்களுக்குப் பிரிந்து செல்கின்றன. சாதாரணமாக மழை பெய்யும் காலங்களில் இவ்வாறான இடமாற்றம் நடைபெறும்.

தேவையற்ற குப்பை கூளங்களை நீண்ட நாட்களுக்குப் போட்டு வைத்தால் கறையான் தோன்றி மூங்கில் பயிரைத் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே வயலைச்சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும், ஆரம்ப காலங்களிலேயே கறையான் புற்றுகளை இடித்து அழிக்க வேண்டும், மரக்கன்றுகளை நடுவதற்கு முன்பு குழிகளில் 200 கிராம் லிண்டேன் 1.3 சதத் தூளை மண்ணுடன் கலந்து கன்றுகளை நடலாம். வைக்கோலைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றை நீரில் ஊறவைத்துப் பின்னர் லிண்டேன் 1.3 சதத்தூளில் பரப்பி வைத்துக் கட்டுப்படுதலாம். வளர்ந்த மரங்களில் தரையிலிருந்து 1 மீட்டர் உயரம் வரை தண்டுப் பாகத்தில் தார் அல்லது சுண்ணாம்புக் கரைசலைப் பூசவேண்டும், லிண்டேன் 20 சதம் (டி.சி.) திரவ மருந்தை 1 லிட்டர் நீரில் 5 மி.லி. என்ற அளவில் கலந்து மரங்களின் அடிப்பாகத்திலும் மற்றும் கறையான் உள்ள பகுதிகளின் மீதும் தெளிக்க வேண்டும். பூச்சி மருந்துகளில் கறையான் கட்டுப்பாட்டிற்கென உள்ள டி.சி. கரையான் தடுப்புவகை மருந்தினை பயன்படுத்த வேண்டும்.

இலைத் துளைப்பான்

இலைத் துளைப்பானின்  பூச்சியியல் பெயர் காஸ்ம்ப்டிரக்ஸ் பாம்புசே ஆகும். இப்பூச்சி தாக்கப்பட்ட இலைகள் துளைக்கப்பட்டும், சுருட்டப்பட்டும் காணப்படும்.

எறும்புகள்

இளங்குருத்துகளைக் கட்டெறும்பு கடித்துக்கொண்டு போகும்.

தண்டு துளைப்பான் மற்றும் இலைகளைத் தாக்கும் பூச்சிகளையும் மானோகுரோசோபாஸ் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. கலந்து தெளிக்கலாம், கறையான் மற்றும் எறும்புகளைக் கட்டுப்படுத்த லிண்டேன் திரவ மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து தூர் ஒன்றுக்கு 1 லிட்டர் ஊற்ற வேண்டும். மூங்கில் மரத்தின் இளங்குருத்துகளைக் கட்டெறும்புகளிலிருந்து பாதுகாக்க செவின் தூளை அதைச் சுற்றிலும் தூவிவிட வேண்டும்.

                                                                                       நன்றி

                                                                           வேளாண் காடுகள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj