Site icon Vivasayam | விவசாயம்

பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்-II

இலவ மர அந்துப்பூச்சி

இலவ மரத்தை மற்றும் காப்பிச் செடிகளைத் தாக்கும் இருவகையான அத்துப்பூச்சிகளின் புழுக்களும் இளம் மரங்களைத் தாக்குகின்றன, இப்புழுக்கள் தாக்கிய மரங்களில் இலைகள் உதிர்தல், நுனியிலிருந்து கிளைகள் இறந்து விடும், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.

மழைக்குப் பிந்தைய இளம் தேக்கு மரங்களை அடிக்கடி கவனமாகக் கண்காணிக்க வேண்டும். மழைக்காலங்களில் இரவு 7 முதல் 11 மணி வரை விளக்குப் பொறிகள் வைத்துத் தாய் வண்டுகளையும், அந்துப்பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அப்பகுதிக்குக் கீழ் 10 செ.மீ. ஆழத்திற்கு சாய்துளையிட்டு அதில் 1:1 என்ற விகிதத்தில் கலந்த மானோகுரோட்டொபஸ் மற்றும் டைக்குளோர்வாஸ் கலவையை ஊசிக்குழாய் மூலம் செலுத்த வேண்டும். மிகவும் சிறிய கிளைகள் தாக்கப்பட்டிருந்தால் அவற்றை வெட்டி அகற்றி விடவேண்டும். புழுக்களின் தாக்குதலால் முற்றுலும் கொல்லப்பட்ட மரங்களை உடனடியாக அகற்றுவதன் மூலம் தாக்குதல் மேலும் பரவுவதைத் தடுக்கலாம்.

பட்டைப்புழுக்கள்

தாய் அத்துப்பூச்சுகள் மரப்பட்டைகளிலுள்ள வெடிப்புகள், காயங்கள், துளைகள் போன்றவற்றில் முட்டைகளை இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் பட்டைகளைக் குடைந்து பட்டைக்கும் மரத்தண்டுக்கும் இடையே உள்ள பகுதிகளில் தங்கி பட்டையை உண்டு வாழ்கின்றன. இதனால் பட்டைகள் மரங்களிலிருந்து கீழே விழுந்து விடும், கடுமையாக பாதிக்கப்பட்ட மரங்கள் இறந்து விடும். இப்புழுக்களைக் கட்டுப்படுத்த மீதைல் பாரதியான் அல்லது குயினால்பாஸ் அல்லது மானோகுரோட்டோபஸ் போன்ற பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றினை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி வீதம் கலந்து பாதிக்கப்பட்ட பட்டைப் பகுதிகளில் பூச வேண்டும், பட்டையை நீக்காமல் புழுக்களை எடுத்து அழிக்கலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்

மாவுப்பூச்சி, பஞ்சுப்பூச்சி, தத்துப்பூச்சு, அசுவினி, மெழுகுப்பூச்சி போன்ற பல்வேறு சாறு உறிஞ்சும் பூச்சிகள் தேக்கின் இலைகளையும், இளந்தண்டுகளையும் தாக்கிச் சாற்றினை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகள் நிறம் குன்றி வெளிர் மஞ்சள் நிறமடைகின்றன. வளர்ச்சியும் குன்றிவிடும். இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஊடுருவும் பூச்சிக் கொல்லி மருந்துகளான மீதைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் 2 மி.லி ஒரு லிட்டர் நீர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மலர்கள்  மற்றும் விதைகளைத் தாக்கும் பூச்சிகள்

இவ்வகைப் பூச்சிகள் விதை உற்பத்தியில் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றில் முக்கியமானது ஆமணக்கின் பூங்கொத்துப் புழுவாகும். இப்புழுக்கள் தேக்கின் பூங்கொத்துகளைப் பின்னி உள்ளிருந்து கொண்டு பின்னர் உண்டாகும் இளம் விதைகளை உண்டு வளர்கின்றன. பாதிக்கப்பட்ட பூங்கொத்துகளில் உண்டாகும் விதைகள் அழிந்துவிடும். இதுபோன்றே இன்னும் சிலவகை நாவாய்ப் பூச்சிகளும் இளம் விதைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு முளைப்புத்திறன் குறைகிறது. கிடங்குகளில் சேமிக்கப்படும் தேக்கு விதைகளை ஒருவகை சிறிய வண்டுகள் துளையிடுகின்றன. இவை விதைகளின் முளைக்கருவை உண்பதால் தாக்கப்பட்ட விதைகள் முளைக்காமல் போகின்றன.

                                                                                             நன்றி

                                                                                  வேளாண் காடுகள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version