Site icon Vivasayam | விவசாயம்

பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

University of Kansas Cancer Center ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட  புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியில் வியக்கதக்க தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயினை குணப்படுத்த பருத்தி விதை மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்பதாகும். இதனை பற்றி மேலும் ஆய்வு செய்த போது இந்த பருத்தி விதை புற்று நோயாளிகளுக்கு எளிதான மருந்தாக இருந்து செயல்பட்டு அதனை குணப்படுத்துகிறது என்று டாக்டர் எக்ஸ்யூ கூறினார். குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் செல்கள் உடலில் எல்லா பாகங்களிலும் செயல்பட்டு பல்வேறு பாதிப்பினை கொடுக்கிறது. இந்த பாதிப்பினை சரிசெய்வதற்கு பருத்தி விதை உபயோகப்படுகிறது என்று டாக்டர் எக்ஸ்யூ கூறினார்.

மேலும் அவருடைய குழுவினர் இதனை பற்றி ஆய்வு செய்ததில் பருத்தி நேரடியாக Musashi ஆர்.என்.ஏ-விற்கு செல்வதால் ஆரோக்கியமான செல்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைகிறது. இதனால் அசாதாரணமான உயிரணுக்களை உடல் விடுவித்துக்கொள்ளும். மேலும் செல் இறப்பை இது தடுக்கும். பெரும்பாலான மருந்துகள் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இந்த பருத்தி விதை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று டாக்டர் எக்ஸ்யூ கூறினார். இது மிக சிறந்த ஆற்றல் கொண்ட மருந்து பொருளாக செயல்பட்டு புற்று நோயினை குணப்படுத்துகிறது. இந்த பருத்திவிதை அதிக அளவு புரோட்டினை உடலிற்கு தருவதால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் மிக சிறப்பாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியினை தானாகவே உருவாக்கிறது.

http://www.sciencedaily.com/releases/2016/01/160112144649.htm

மேலும் செய்திகளுக்கு

 https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli 

Exit mobile version