தற்போது ஆராய்ச்சியாளர்கள் காய்-கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். மக்களுக்கு தற்போது காய்-கறிகளின் தேவை அதிகம் இருப்பதால் அதனை ஈடுகட்ட ஆராய்ச்சியாளர்கள் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை மெற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த சுரங்க முறையில் காய்-கறிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தினை மேற்கொண்டனர். அவர்கள் நான்கு வகையான கீரையினை சுரங்க முறையில் உற்பத்தி செய்ததில் அதிக விளைச்சல் கிடைத்தது. அவை: leaf, butterhead, romaine, and crisphead (Batavia) வகை கீரைகள் ஆகும்.
கடந்த 2008-2013 வரை சீனாவின் விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுரங்க விவசாய முறையினால் அதிக அளவு விளைச்சல் கிடைத்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக: Batavia பயிர்வகை அதிக மகசூலினை குறைவான நாட்களிலேயே பெற்று தருகிறது என்பதினை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த கீரைகளின் இலைகள் மிக பெரியதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது அதன் தரம் மிக நன்றாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக அளவு புவி வெப்பமாகும் இந்த காலத்தில் புதியதாக அறிமுப்படுத்திய இந்த கீரை வகைகள் கண்டிப்பாக விளைச்சலை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.sciencedaily.com/releases/2016/01/160113162501.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli