Skip to content

பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்

நாளுக்கு நாள் குறைந்து வரும் வனவளத்திற்கான பல காரணங்களில் மரப்பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளும் ஒர் முக்கியமான காரணமாகும், இதற்கு பூச்சிகளின் இனப்பெருக்கத் திறனும் ஒர் வருடத்திற்குள் பல தலமுறைகளை உருவாக்கிவிடும் திறமையுமே காரணமாகும். வனவளத்தைப் பேணிக்காக்கவும், வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திடவும் பண்ணைக் காடுகள் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹைமினாப்டிரா, கோலியாப்டிரா மற்றும் லெபிடாப்டிரா என்னும் பூச்சியினங்களே வனப்பயிர்களின் இலைகளை உண்ணுகின்றன, இதைத்தவிர ஆர்த்தாப்டிரா, டிப்டீரா, ஹெமீப்டீரா என்னும் பூச்சி மற்றும் வண்டு இனங்கள் மரங்களைத் துளைத்து உண்ணுவதன் மூலம் மரங்களையே அழிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இலைபுழுக்கள்

நமது நாட்டில் தேக்கு பயிரிடப்படும் அனைத்து மாநிலங்களிலும் இலைப் புழுக்கள் தேக்கு இலைகளின் புழுக்கள் காணப்படுகின்றன. இவற்றால் 44 சதம் வரை மர உற்பத்தியில் இழப்பு ஏற்படுகின்றது, இப்புழுக்கள் ஜூன் முதல் அக்டோபர் வரை காணப்படுகின்றன.

இலை சுரண்டும் புழுக்கள்

இலை சுரண்டும் புழுக்கள் தேக்கு இலைகளின் நரம்புகளை விட்டுவிட்டுப் பச்சையத்தை மட்டும் சுரண்டி உண்ணுகின்றன. மர உற்பத்தி ஏறத்தாழ 30 சதம் வரை குறைகின்றது. இது ஜூன் முதல் அக்டோபர் வரை காணப்படுகிறது.

இவ்விரண்டு புழுக்களை கட்டுப்படுத்த மானோகுரோட்டோபஸ் அல்லது எண்டோசல்பான் 2 மி.லி. வீதம் ஒர் லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும், மரங்களுக்கென உள்ள உயரத்தெளிப்புக் குழாயினைப் பயன்படுத்தி மருந்து தெளிக்க வேண்டும்.

இது தவிர புரடீனியா, காவடிப்புழுக்கள், இலை சுருட்டும் புழுக்கள், இலைத் துளைபான்கள், கம்பளிப் புழுக்கள் போன்றவையும் இலைகளைத் தாக்குகின்றன. வெட்டுக்கிளிகள், இலை வண்டுகள், கூன்வண்டுகளும் வெண்புழுக்களின் தாய் வண்டுகள் போன்றவையும் இலைகளை உண்ணுகின்றன. இந்தப் பூச்சிகளையும் எண்டோசல்பான் அல்லது பாசலோன் அல்லது மானோகுரோடோபஸ் அல்லது குயினல்பாஸ் அல்லது குளோரிபைரபாஸ் அல்லது பெனிட்ரோதயான் பூச்சிக் கொல்லி மருந்தை 2 மி.லி. வீதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்பத்தலாம்.

தண்டு துளைப்பான்கள்

தண்டு துளைப்பான்கள் மரம் குடையும் புழுக்களாகும். சில வண்டு இனங்கள் மற்றும் அந்துப் பூச்சிகளின் புழுக்கள் தேக்கு மரத்தின் கிளைகள் மற்றும் அடிமரத்தைத் துளைத்துச் சேதப்படுத்துகின்றன. இவற்றில் காசஸ்கடம்பே என்ற அந்துப்பூச்சியின் செந்நிறப் புழுக்கள் நன்கு பராமரிக்கப்படாமல், வலுவிழந்த, கிளைகள் வெட்டப்பட்ட அல்லது காயம்பட்ட நிலையில் உள்ள மரங்களையே தாக்குகின்றன. இவற்றில் புழுக்கள் மரத்தைக் குடைந்து மென்பகுதியையும்  மையப்பகுதியையும் அழித்து விடுகின்றன. இதனால் தாக்கப்பட்ட பகுதிக்கு மேலுள்ள இடங்களுக்கு நீரும் ஊட்டச்சத்துகளும் செல்வது தடைப்படுகிறது. மேலுள்ள இலைகள் உதிரவும் கிளைகள் உலரவும் தொடங்கும், நாளடைவில் மரம் முழுவதும் உலர்ந்து இறந்துவிடும்.

நீள் கொம்பு வண்டு

நீள் கொம்பு வண்டுகளின் புழுக்கள் அடிமரங்கள் கிளைகளைக் குடைந்து சேதப்படுகின்றன. இதனால் தாக்கப்பட்ட இடத்தைச் சுற்று வளையம் போன்ற படைப்பு உண்டாகிறது. பலத்த காற்று வீசும்போது பாதிக்கப்பட்ட மரங்கள் இந்த இடத்தில் உடைந்து விடுகின்றன. பொதுவாக இளம் மரங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இப்புழுக்களால் தாக்கப்பட்ட மரங்கள் கறையான்களாலும், பூசண நோய்களாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கூன் வண்டு

ஒருவிதக் கூன்வண்டின் புழுக்களும் இம்மரத்தின் கிளைகளைத் தாக்கி சேதப்படுகின்றன. இளம் தேக்குப்பண்ணைகளில் இவ்வண்டுகளால் மிகுந்த சேதம் உண்டாக்குகிறது. தாக்கப்பட்ட செடிகள் இறந்து விடுகின்றன.

                                                                                         நன்றி

                                                                              வேளாண் காடுகள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj